வாகனம் மோதி காட்டெருமைகள் உயிரிழப்பு
திருச்சி, மார்ச் 25 திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார்பள்ளி அருகே நேற்று இரவு 3 வயதுடைய காட்டெருமை ஒன்று உயிரிழந்த நிலையில் கிடந்தது. அதேபோல் மற்றொரு காட்டெருமை வனத்துறை அலுவலகம் அருகில் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளது. அவ்வழியாக சாலையில் சென்றவர்கள் காட்டெருமைகள் இறந்துகிடந்தது குறித்து துவரங்குறிச்சி வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் இரண்டு காட்டெருமைகளையும் ஜேசிபி மூலம் ஒரே இடத்திற்கு எடுத்து வந்து கால்நடை மருத்துவர்கள் மூலம் பிரேத பரிசோதனை செய்து அதே இடத்தில் குழி தோண்டி புதைத்தனர். இரண்டு காட்டெருமைகளும் இரவு நேரத்தில் தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் போது வாகனத்தில் அடிபட்டு இறந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.