திருச்சியில் வழக்கறிஞரை துடிக்க துடிக்க வெட்டிக் கொலை செய்த 5 பேர் கைது: காவல்துறை அதிரடி

0 760
Stalin trichy visit

திருச்சியில் கொலை வழக்கில் சிக்கிய வழக்கறிஞர் கோபிக்கண்ணன் 5 பேர் கொண்ட மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட பதைபதைக்கும் வீடியோ காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருச்சியில் வழக்கறிஞராக பணிசெய்து வந்தவர் கோபிகண்ணன் (வயது 35 ) இவரது மனைவி கோதை. இத்தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர். திருச்சி பீமநகரில் உள்ள கிருஷ்ணன் கோயில் சந்தில் கோபி கண்ணன் தனது குடும்பத்தினருடன் வசித்துவந்தார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு இதே தெருவை சேர்ந்த ஹேமந்குமார் (வயது 30) என்பவர் கூலிப்படையினரால் கொலை கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் வழக்கறிஞர் கோபிகண்ணன் (வயது 35 ) முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.இந்த கொலை வழக்கில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக பழிக்குப்பழி நடவடிக்கையாக கோபி கண்ணன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசாரின் விசாரணையில் முடிவில் கொலை செய்த ஐந்து பேரையும் சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் கைது செய்துள்ளனர். இந்தநிலையில் கொலைசெய்யும் பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது அந்த வீடியோவில் வழக்கறிஞர் கோபி கண்ணன் நேற்றிரவுஇரவு ஏழு முப்பது மணி அளவில் தனது மகளுக்கு சைக்கிள் ஓட்ட கற்றுத்தருகிறார். அப்போது 5 பேர் கொண்ட கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி ஓடுகின்றனர். இந்த சிசிடிவி காட்சி அடிப்படையில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave A Reply

Your email address will not be published.