பேருந்து மோதி வட மாநில வாலிபர் சாவு

0 155
Stalin trichy visit

திருச்சி மார்ச் 27 திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் விடியற்காலை 3 மணி அளவில் தனியார் செராமிக்ஸ் நிறுவனம்  அருகில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சாலையை கடக்க நின்று கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென்று தெற்கிலிருந்து வடக்கு நோக்கி வந்த தனியார் பேருந்து எதிர்பாராத விதமாக வாலிபர் மீது மோதியது. இந்த விபத்து சம்பவ இடத்திலேயே வாலிபர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வடக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த வாலிபர் யார்?எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்திய போது உடனடியாக தகவல் தெரியவில்லை. இறந்த வாலிபர் சுமார் ஐந்து அடி உயரம் கொண்டவர மாநிறம்.இவர் காப்பி கலர் ஷர்ட் மற்றும் பச்சை கலர் டவுசர் அணிந்திருந்தார். மேலும் அவரது கையில் சக்னம் ராய் என பச்சை குத்தி இருந்தது.கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்தப் பகுதியில் இவர் சுற்றி கொண்டு இருந்ததாகவும் இந்தி மொழி பேசியதாகவும் தெரிய வந்துள்ளது.எனவே இறந்த வாலிபர் வட மாநிலத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகின்றனர். எனவே இவரைப் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக வடக்கு போக்குவரத்து புலனாய் பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்குமாறு கூறியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.