வாலிபரை தாக்கிய ரவுடிகள்
திருச்சி, மார்ச் 27 திருச்சி, தென்னுார் பாலன் நகரைச் சேர்ந்தவர் சகாய பிரதாப் (43), வீட்டில் இருந்த இவரை சரித்திர பதிவேடு ரவுடிகளான எ.புதுார், நல்லகேணி தெருவைச் சேர்ந்த பிரதாப் (41), கொல்லங்குளம் பாரதிநகரைச் சேர்ந்த அபுதாகீர் (36) மற்றும் இப்ராகிம் (40) ஆகிய 3 பேர் எடமலைப்பட்டி புதூர், அரசு காலனி அருகே அழைத்து கட்டையால் தாக்கினர். இதில் காயமடைந்த சகாய பிரதாப் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.