வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது
திருச்சி, மார்ச் 28:திருச்சி, மேல கல்கண்டார் கோட்டை, கணேஷ் நகரைச் சேர்ந்தவர் ராஜதுரை (வயது28). மார்ச்26ம் தேதி மேலகல்கண்டார் கோட்டை நேதாஜி தெரு,தாகராஜ் காலனி வழியாக வீட்டுக்கு சென்றார். அப்போது அவ்வழியாக வந்த மர்ம நபர் இவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ. ஆயிரம் பணத்தை இவரது பாக்கெட்டில் இருந்து பறித்துக்கொண்டு தப்பினார். இது குறித்து புகாரின் பேரில் பொன்மலை போலீசார் வழக்கு பதிந்து அதே பகுதியைச் சேர்ந்த ராஜதுரை (வயது28) என்பவரை கைது செய்தனர்.