திருச்சி மாநகராட்சி பட்ஜெட் விவாத கூட்டம்

0 240
Stalin trichy visit

திருச்சி மார்ச் 28  திருச்சி மாநகராட்சியின் 2025 -2026 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் நேற்றுமுன் தினம் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து இன்று திருச்சி மாநகராட்சி காமராஜ் மன்றம் ஏ. எஸ் .ஜி. லூர்துசாமி கூட்டம் மண்டபத்தில் பட்ஜெட் விவாத கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மேபர் அன்பழகன் தலைமை தாங்கினார். ஆணையர் சரவணன் துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

கூட்டத்தில் நகரப்பொறியாளர் சிவபாதம், மண்டலத் தலைவர்கள் ஆண்டாள் ராம்குமார், மதிவாணன் , துர்கா தேவி,ஜெய நிர்மலா , விஜயலட்சுமி கண்ணன், மற்றும் நகர் நல அலுவலர் மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி உதவி ஆணையர், செயற்பொறியாளர்கள் , உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

கூட்டத்தில் மேயர் அன்பழகன் பேசியதாவது:-பட்ஜெட்டில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கு மாநகராட்சி அனைத்து நிதிகளையும் ஒதுக்கி உள்ளதாக
அதிமுக கவுன்சிலர் தவறான கருத்துகளை கூறி பேட்டி அளித்துள்ளார். எனவே அது குறித்து பொதுமக்களுக்குசரியான தகவலை கூற வேண்டியது என்னுடைய கடமை ஆகும்.

ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கு ரூபாய் 492.55 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது இதில் 140 கோடி மானியம் 231.26 கடன் பொது நிதி 121.29. கோடி.
இதேபோன்று குடிநீர் விநியோகம் பணிக்கு 2.03 மதிப்பீடு தொகை அதில் ஒரு கோடி மானியம் 1.03 பொது நிதி,ஆம்னி பேருந்து நிலையம் கட்ட 17.60 கோடி மதிப்பீடு.இதில் 8.80 மானியம்,880 80 பொது நிதி,ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்ட 14.69 கோடி மதிப்பீடு.இதில் 8.51 மானியம், 6.18 பொது நிதி ,புறவழி சாலை 68 கோடி மதிப்பீடு இதில் 53 கடன் 15 பொது நிதி,கனரா சரக்கு வாகன முனையம் கட்ட 11.14 மதிப்பீடு 8.52 மானியம் 2.62 பொது நிதி,ஒருங்கிணைந்த காய்கறி அங்காடி கட்ட 236 கோடி மதிப்பீடு இதில் 128 கோடி மானியம், 100 கோடி கடன், 8 கோடி பொது நிதி,ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் சிறு பாலம் 2.30 கோடி மானியம் 046 பொது நிதி 1.84 ஆகும்.நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கட்சி பாகுபாடு இன்றி அனைத்து கவுன்சிலர்களுக்கு போதிய நிதியை வழங்கிடுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி மாநகராட்சியில் அனைத்து கவுன்சிலருக்கும் போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. குறிப்பாக அதிமுக கவுன்சிலர்கள் உள்ள 9வது வார்டில் இந்த ஆண்டு 565.31 லட்சத்திற்கு பணிகள் நடந்து வருகிறது இதே போன்று 37 வது வார்டில் 1040.19 லட்சம்,65 வது வார்டில் 3105.42 லட்சத்திற்கு பணிகள் நடைபெற உள்ளது என்று மேயர் அன்பழகன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது திடீரென்று அதிமுக எதிர்க்கட்சி தலைவர் அம்பிகாபதி எழுந்து நின்று குறுக்கிட்டு பேசினார்
எங்கள் வார்டு பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து உள்ளதாக கூறியுள்ளீர்களே. இதில் மத்திய அரசின் நிதியும் தானே இருக்கிறது.நீங்கள்செய்தது போல் ஏன் கூறுகிறீர்கள் என்று கேட்டார்.
அதற்கு திமுக கவுன்சிலர்கள் சிலர் எழுந்து நின்று சத்தம் போட்டனர்.
அப்பொழுது திமுக கவுன்சிலர் காஜாமலை விஜய் எழுந்து நின்று அதிமுக கவுன்சிலர் மைக்கை பிடுங்குங்கள் என்று சத்தம் போட்டார்.இதனைக் கேட்ட அதிமுக கவுன்சிலர் அம்பிகாபதி நான் சொல்ல வேண்டிய கருத்தை கேட்காமல் மைக்கை பிடுங்குங்கள் என்று சொல்வது சரியா என்று ஆவேசமாக பேசிக்கொண்டு
மேயர் அருகில் சென்று அம்பிகாவதி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.பிறகு அவர் அங்கிருந்து வெளிநடப்பு செய்தார்.அவருடன் மற்றொரு அதிமுக கவுன்சிலர் அனுசுயா ரவிசங்கரும் வெளியேறினார்.இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:
சுரேஷ் (இ.கம்யுனிஸ்ட்):- மாநகராட்சி பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்திருந்தாலும் பற்றாக்குறை இருப்பதை சரி செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை
மாநகராட்சி எடுத்து உள்ளது பாராட்டுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.பெரிய நிறுவனங்கள் வரிபாக்கியுள்ளதைமாநகராட்சி நிர்வாகம் வசூல் செய்ய வேண்டும்.

சுரேஷ் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி)
பட்ஜெட்டில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் கூறப்பட்ட இருந்தாலும் பற்றாக்குறை பட்ஜெட் என்பது வருத்தமளிக்கின்றது அதேபோல் வடிகாலுக்கு என்று கூடுதல் நிதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.கல்வி குழுவிற்கு உரிய அதிகாரம் அளித்து அந்த நிதியை உரிய வகையில் பயன்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் மாநகராட்சி முழுமைக்கும் ஆனால் வளர்ச்சியாக அமைய வேண்டும்.

ஜவகர் (காங்)பற்றாக்குறை உள்ள பட்ஜெட் ஆக இருந்தாலும் அதனை சமாளிக்க சரி செய்ய பல்வேறு புதிய திட்டங்களை இந்த மாநகராட்சி அறிவித்திருப்பதற்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். என்னுடைய வார்டில் 9 கிலோமீட்டர் தூரத்திற்கு பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படாமல் உள்ளது.மாநகராட்சி நடவடிக்கை எடுத்து திட்டத்தை செயல்படுத்தினால் மாநகராட்சிக்கு மேலும் வருவாய் கிடைக்கும் அது போல பல்வேறு
வார்டுகளில் செயல்படுத்தப்படாமல் இருக்கும் பாதாள சாக்கடை திட்ட பணியை விரைந்து செயல்படுத்த வேண்டும்,பைஸ் அகமது (ம. ம.க):-இந்த பட்ஜெட்டில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது .அதே சமயத்தில் என்னுடைய வார்டில் ஒரு புதிய அறிவிப்பு வரும் என்று எதிர்பார்த்து இருந்தேன். மழைக்காலத்தில் அண்ணாமலை நகர் உக்கிர காளியம்மன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் வடியாமல் இருந்து வருகிறது. அதனை சரி செய்ய ஒரு திட்டம் தீட்டப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்படாமல் இருப்பது வருத்தத்தை அளித்துள்ளது. இது தொடர்பாக சிறப்பு கவனம் செலுத்தி திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

சங்கர் (திமுக) மாநகராட்சி கட்டடம் மூலம் வரும் வருவாய் வசூலை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செந்தில்குமார் (திமுக)பட்ஜெட்டில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது அதனை வரவேற்கிறேன் பட்ஜெட்டில் வரவு செலவு பற்றி விவரங்கள் கூறப்பட்டுள்ளது.அது என்ன என்று தெரியவில்லை. இது தொடர்பாக மாநகராட்சி எங்களைப் போன்ற முதல் முறையாக தேர்ந்தெடு க்கப்பட்ட கவுன்சிலர்களுக்கு வரவு செலவு பற்றி வகுப்பு எடுத்து புரிய வைக்க வேண்டும்.
இதைத் தொடர்ந்து கவுன்சிலர்கள் பலர் பட்ஜெட்டை பாராட்டி பேசினார்கள்.

Leave A Reply

Your email address will not be published.