ரோந்து பணிக்காக 10 இருசக்கர வாகனங்கள் : மாநகர காவல் ஆணையர் தொடங்கி வைத்தார்
திருச்சி, மார்ச் 29 திருச்சி மாநகர காவல் நிலையங்களில் ரோந்து பணிக்காக 10 இரு சக்கர ரோந்து வாகனங்களை (Two wheeler Patrol) மாநகர காவல் ஆணையர் தொடங்கி வைத்தார்கள்.
தமிழக காவல்துறை நவீனமயமாக்கல் திட்டத்தின்படி தமிழக அரசின் உத்தரவின்படி தமிழகத்தில் குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறாவண்ணம் ரோந்து செய்து, முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைக்காக 10 இருசக்கர ரோந்து வாகனங்கள் (Two wheeler Patrol) திருச்சி மாநகர காவல்துறைக்கு வழங்கப்பட்டது.
திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, திருச்சி மாநகர அலுவலகத்தில் இருந்து இருசக்கர ரோந்து வாகனங்களை கொடியசைத்து நேற்று (மார்ச்28) தொடங்கி வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சியின் போது திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள் வடக்கு மற்றும் தெற்கு, காவல் உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டார்கள்.
மேற்கண்ட இருசக்கர வாகனங்கள் மத்திய பேருந்து நிலையம், இரயில் நிலையம், சத்திரம்பேருந்து நிலையம், காவேரி பாலம், கொள்ளிடம் பாலம் ஆகிய பகுதிகளில் ரோந்து செய்து குற்றச்சம்பவங்கள் ஏதும் நடைபெறா வண்ணம் குற்றத் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டும், அவசர எண்.100-க்கு பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் அழைப்புகளுக்கு சம்பவ இடத்திற்கு விரைவாக சென்று சட்டரீதியான துரித நடவடிக்கை மேற்கொள்ளவும், திருச்சி மாநகரில் சட்டம் ஒழுங்கை பேணிபாதுகாக்க இந்த இருசக்கர ரோந்து வாகனங்கள் பயன்படுத்தபட உள்ளன.