தீயணைப்புத்துறை பணியாளர்களுக்கான புதிய குடியிருப்புகள் காணொளி காட்சி மூலம் திறப்பு

0 206
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 29 திருச்சி மாவட்டம், துறையூரில் ரூ. 3.53 கோடி மதிப்பீட்டில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் சார்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு பணியாளர்களுக்கான குடியிருப்புகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார் அதனைத் தொடர்ந்து துறையூரில் நடைபெற்ற விழா நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் குடியிருப்பு வளாகத்தை பார்வையிட்டார்.

இந்நிகழ்வில், முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா, துறையூர் நகர் மன்ற தலைவர் செல்வராணி, முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ராஜேந்திரன், இந்து சமய அறநிலையத்துறை மாவட்ட தலைவர் முரளி, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை திருச்சி மண்டல துணை இயக்குநர் க.குமார், தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தின் செயற்பொறியாளர் திருமலைசாமி, உதவி பொறியாளர் நாராயணசாமி, மாவட்ட தீயணைப்பு அலுவலர் (பொறுப்பு) வடிவேல், உதவி மாவட்ட அலுவலர் வீரபாகு சிறப்பு நிலைய அலுவலர்பாலச்சந்தர், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.