உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம்

0 169
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 29 உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு இன்று  திருச்சி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றியம், கீரம்பூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா. பிரதீப் குமார் சிறப்பு பார்வையாளராக பங்கேற்று சிறப்புரையாற்றி தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்களுக்கு பொன்னாடை அணிவித்து அவர்களது பணியினை பாராட்டினார்.

இந்நிகழ்வில் முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா, திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) சுரேஷ் உதவி இயக்குநர் ஊராட்சிகள் குமார் உள்ளிட்ட அரசுத்துறை உயர் அலுவலர்கள், துறையூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவிச்சந்திரன் (கிராம ஊராட்சி), சரவணகுமார் (வட்டார ஊராட்சி) மற்றும் வளர்ச்சித் துறை அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.