போதை மாத்திரை விற்க முயன்றவர் கைது
திருச்சி, மார்ச் 31 திருச்சி பாலக்கரை காஜா பேட்டை பொது கழிப்பிடம் அருகில் போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து பாலக்கரை இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்த பொழுது காஜாப் பேட்டை மதுரை வீரன் கோவில் தெருவை சேர்ந்த சந்திரசேகர் (வயது 33) என்பவர் போதை மாத்திரை விற்பனை செய்ய இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து சந்திரசேகரிடம் இருந்து 140 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்துள்ளனர்