இங்கிலிஷ் காய்கறி வியாபாரிகள் அமைச்சரிடம் கோரிக்கை மனு

0 161
Stalin trichy visit

திருச்சி மார்ச் 31 திருச்சி காந்தி மார்க்கெட் இங்கிலீஷ் வியாபாரிகள் சங்க தலைவர் கண்ணதாசன் தலைமையில் சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் ஏராளமானவர்கள் திரண்டு வந்து அமைச்சர் கே என். நேருவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

அம்மனுவில் நாங்கள் தற்போது இயங்கிவரும் காந்தி மார்க்கெட்டில் இங்கிலீஸ் காய்கறி மொத்த வியாபாரம் மட்டும் 76 வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகிறோம். ஒவ்வொரு வியாபாரியும் இரண்டு மற்றும் மூன்று கடை வைத்து வியாபாரம் செய்கிறோம். நாங்கள் இங்கிலீஸ் காய்கறி மொத்த வியாபாரிகள் சங்கம் திருச்சி என்ற பெயரில் செயல்படுகிறோம். எங்களுக்கு மட்டும் காந்திமார்க்கெட்டிற்கு தினமும் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வரும் சுமார் 50க்கும் மேற்பட்ட டாரஸ் லாரிகளில் கோஸ், காரட், பீன்ஸ், சௌ சௌ, காலிபிளவர் ஆகிய காய்கறிகள் மூட்டைகளாக வருகிறது. இந்த காய்கறி வெளியூர் மற்றும் சந்தைகளுக்கு எடுத்துச் செல்லும் சில்லறை வியாபாரிகள் தினமும் சுமார் 200 க்கும் மேற்பட்ட லாரி மற்றும் சிறிய வண்டிகளில் வருகின்றனர்.ஆகையால் தாங்கள் புதியதாக அமைக்கப்பட்ட உள்ள மார்க்கெட் இங்கிலீஸ் காய்கறி, நாட்டுக் காய்கறி, உருளை, வெங்காயம், இஞ்சி, சேணை, கருணை, எலுமிச்சை, மாங்காய், கிழங்கு, பழங்கள், வாழைக்காய், பூ மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரம் ஆகியவை இணைந்த ஓர் ஒருங்கிணைந்த மார்க்கெட்டாகவும் குறைந்தளவு சுமார் 1200 சதுரடி அளவுள்ள வசதியும் கொண்ட மார்க்கெட்டாகவும் அமைக்குமாறும் புதியதாக அமைக்கும் மார்க்கெட்டில் எங்களது இங்கிலீஸ் காய்கறி மொத்த வியாபார சங்கத்தில் உள்ள 76 உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கடை ஒதுக்கி தருமாறு கேட்டுக் கொள்கிறோம். தாங்கள் அமைக்கும் புதிய மார்க்கெட்டில் எங்கள் வியாபாரிகளுக்கு சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் வியாபாரிகளுக்கு
கடைகள் சொந்தமாக வழங்கியது போல் எங்களுக்கும் கடைகள் சொந்தமாக வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். தாங்கள் புதிய மார்க்கெட் அமைப்பது சம்பந்தமாக எந்த ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்தினாலும் எங்கள் சங்கத்தை அழைத்து ஆலோசனை நடத்த வேண்டும் என்றும் நாங்கள் எந்த அமைப்பிலும் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில்  கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.