நடந்து சென்றவரிடம் செல்போன் பறிப்பு

0 143
Stalin trichy visit

திருச்சி மார்ச் 31 திருச்சி, திருவரங்கம் மூலத்தோப்பு அகிலாண்டேஸ்வரி கார்டன் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் பாபு (வயது45). மேலூர் ரோட்டில் இயங்கிவரும் பிரபல தனியார் பள்ளியில் வேன் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் தனது வீட்டிற்கு அருகே நடைபயிற்சி மேற்கொண்ட போது, பைக்கில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பாபுவை எட்டி உதைத்ததில் நிலைதடுமாறி ரோட்டில் விழுந்தார். அப்போது அவர் கையில் வைத்திருந்த ரூ. 25 ஆயிரம் மதிப்புள்ள ஆண்ட்ராய்டு செல்போனை பிடிங்கி கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்து போலீஸ் அவசர உதவி எண்ணுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அதன் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த திருவரங்கம் போலீசார்,இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.