புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவர் கைது

0 187
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 31-திருச்சி, எடமலைப் பட்டிபுதுார், ப்ரான்சியா காலனி ஆர்ச் பகுதியில் அரசால் தடைவிதிக்கப்பட்டட புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பதாக எடமலைப் பட்டிபுதுார் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணி சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு புகையிலை விற்ற அதே பகுதியைச் சேர்ந்த கோபிநாத் (வயது23) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து ரூ. 4 ஆயிரத்து 368 மதிப்புள்ள 2.117 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.