தொட்டியம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆய்வு

0 577
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் தொட்டியம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் புதிதாக அமைய உள்ள தொட்டியம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கல்யாணசுந்தரம் மற்றும் ஆதிகேசவலு ஆகியோர்நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது புதிதாக அமைய உள்ள தொட்டியம் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடத்தின் உள்கட்டமைப்பு குறித்தும் நீதிமன்றத்தின் எல்லைப் பகுதிகள் மற்றும் தொட்டியம் பகுதிக்குட்பட்ட வழக்குகளின் நிலுவை நிலை குறித்தும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கல்யாணசுந்தரம் மற்றும் ஆதிகேசவலு ஆகியோர் ஆய்வுகள் செய்து திறப்பு விழா நிகழ்ச்சிகள் குறித்தும் கலந்து ஆலோசனை செய்தனர்.

அப்போது முசிறி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் சங்கத்தலைவர் செந்தில்குமார் தலைமையில் நிர்வாகிகள் முசிறியில் சார்பு நீதிமன்ற வளாகம் அமைக்க வேண்டும் என கோரிக்கை மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட உயர்நீதிமன்ற நீதிபதிகள் மனு குறித்து வழக்கறிஞர்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தார். பின்னர் இந்த மனு குறித்து உரிய பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.

இந்த ஆய்வின் போது திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி கிளாடுஸ்டோன் பிளாஸ்ட் தாகூர் மற்றும் முசிறி மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி வேலுச்சாமி மற்றும் முசிறி வழக்கறிஞர்கள் சங்க தலைவர் செந்தில்குமார், செயலாளர் சிவக்குமார்,பொருளாளர் துரைசெல்வம், துணைத்தலைவர் கணபதி, துணைச்செயலாளர் பத்மராஜா, மூத்த வழக்கறிஞர்கள் பாஸ்கர், விவேக், பிரபாகரன் மற்றும் வழக்கறிஞர்கள் சரவணன், சக்திவேல்,முத்துசெல்வன், விமல்ராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.