“நம் மண்ணுக்கும் மக்களுக்கும் உபயோகமாக வாழ்வதே வாழ்க்கை” – எஸ்.ஆர்.எம் கல்லூரி மாரத்தான் போட்டி!
உலக இதய தினம் மற்றும் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு திருச்சி எஸ்.ஆர்.எம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் திருச்சி எஸ்.ஆர்.எம் குழும நிறுவனங்கள் சார்பாக இன்று “SRM TRICHY RUN 21” மாரத்தான் போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில் அனைத்து கல்லூரிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் ஆசிரியப் பெருமக்கள் என 700க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஓடினர். இதில் ஆண்களுக்கு 10 கிலோ மீட்டரும், பெண்களுக்கு இரண்டு கிலோமீட்டர் தொலைவிலும் மாரத்தான் நடைபெற்றது. இதில் முதல் பரிசாக 5 ஆயிரமும், இரண்டாவது பரிசாக 4 ஆயிரமும், மூன்றாவது பரிசாக 3 ஆயிரமும் வழங்கப்பட்டது.

இப்போட்டி இணை பிரபல நடிகரும் தயாரிப்பாளரும் சமூக ஆர்வலருமான சௌந்தர ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் பேசுகையில்…. “இதை ஒரு நிகழ்வாக மட்டும் கடந்து செல்லாமல் நம் மண்ணுக்கும் மக்களுக்கும் உபயோகமாக வாழ்வதே வாழ்க்கை” என்றார்.

மேலும் இந்நிகழ்வில் திருச்சி எஸ்.ஆர்.எம் குழும தலைவர் டாக்டர் சிவகுமார், எஸ்.ஆர்.எம் IST தலைவர் நிரஞ்சன், செயல் இயக்குனர் டாக்டர் ரகுபதி இணை இயக்குனர் டாக்டர் என் பாலசுப்ரமணியம் மற்றும் எஸ்ஆர்எம் மருத்துவமனை டீன் ரேவதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய… https://chat.whatsapp.com/ElwJ6Sxx3w58HlHTxk97fo