சாரநாதன் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக முதியோர் இல்லத்திற்கு உதவிகள்!

0 388
Stalin trichy visit

திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அமைப்பின் அன்றாட நிகழ்வுகளில் ஒன்றான முதியோர் இல்லம், குழந்தைகள் காப்பகம், மனநல காப்பகம் ஆகியவற்றில் பார்வையிட்டு வருகின்றனர்.

இதனடிப்படையில் இன்று திருச்சி இடைமலைப்பட்டி புதூரில் உள்ள ஹீட் இந்திய தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் கங்காரு முதியோர் இல்லத்தை பார்வையிடச் சென்றார். முதியோர் இல்லத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் மாணவர்கள் கலந்துரையாடினர்.

இந்நிகழ்வில் காப்பகத்தில் நிர்வாக இயக்குனர் சி.ஆர் ராஜா மற்றும் சாரநாதன் பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் கார்த்திகேயன் ஆகியோர் தலைமை தாங்கினர். மேலும் கங்காரு முதியோர் இல்லம் அமைப்பின் அரவணைப்பில் உள்ளவர்களுக்கு சாராநாதன் பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக 7 ஆயிரம் மதிப்பிலான மளிகை பொருட்களை 39 நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் தாமாக முன்வந்து வழங்கினார்.

 

மேலும் கங்காரு அமைப்பின் நிர்வாக இயக்குனர் சி.ஆர் ராஜா கூறுகையில்… “முதியோர் இல்லங்களில் அவசியம் இதனை நடத்துவதில் உள்ள சிரமங்கள் மற்றும் இவற்றை எதிர்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தார். முதியோர் இல்லங்களில் எண்ணிக்கையும் அதில் இருப்போரின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருவதாகவும், முதியோர் இல்லங்களில் தங்கியிருப்போரின் உறவுகளோடு அவர்கள் நேரத்தை செலவிட வேண்டும் என்ற ஆசையில் தற்போது மாணவர்களிடம் ஏற்பட்ட சந்திப்பு பூர்த்தி செய்துள்ளது. முதியோர் இல்லங்களுக்கு அனுப்புவதை குறைக்க மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம் என்று மாணவர்கள் கூறுவது பாராட்டத்தக்கது” என மாணவர்களை வாழ்த்தினார்.

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய… https://chat.whatsapp.com/ElwJ6Sxx3w58HlHTxk97fo

Leave A Reply

Your email address will not be published.