வேலூரில் நடைபெற்ற தேசிய சிலம்பப் போட்டி – திருச்சி சிலம்ப சங்கத்தினர் பங்கேற்பு!
சிலம்பம் இந்தியா அசோசியேசன் சார்பில் 3வது தேசிய சிலம்ப போட்டி வேலூரில் நேற்றும் இன்றும் நடைபெற்றது. இப்போட்டியை சிலம்ப தமிழ்நாடு சங்கம் நடத்தியது.

இதில் இந்தியா முழுவதிலும் இருந்து 500க்கும் மேற்பட்ட சிலம்ப வீரர்கள் பங்குபெற சிலம்ப போட்டி நடைபெற்றது. தேசிய அளவிலான சிலம்ப போட்டியில் சிலம்பம் திருச்சி சங்கம் சார்பாக மாவட்ட செயலாளர் கலைச்சுடர்மணி M.ஜெயக்குமார் தலைமையில் மாவட்ட பொருளாளர், M.செந்தில்குமார், மாவட்ட உறுப்பினர் M.வேல்முருகன், K.தவசுமணி மற்றும் மாவட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இப்போட்டியில் T.மெளலிஸ்வரன், M.சந்தோஷ், S.ரமணா ஆகியோர் தேசிய அளவில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கமும், T.சுபஸ்ரீ தவசுமணி தேசிய அளவில் இரண்டாமிடம் பெற்று வெள்ளி பதக்கமும் பெற்று சாதனை புரிந்தனர்.