கோடைக்கால நீர்மோர் பந்தல் : அமைச்சர் அன்பில் மகேஸ் திறந்து வைத்தார்

0 326
Stalin trichy visit

திருச்சி, ஏப். 18  பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வண்ணம் நீர்மோர்பந்தல்களை  தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  திறந்து வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் திராவிட முன்னேற்றக் கழக தலைவருமான
மு க ஸ்டாலின்  ஆலோசனையின் படி திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கூத்தாப்பார் பேரூராட்சிக்கு உட்பட்ட பாரதிபுரம் பகுதியில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நீர் மோர் பந்தலை திறந்து வைத்தது பொது மக்களுக்கு இளநீர் தர்பூசணி வெள்ளரிக்காய் உட்பட குளிர்பானங்களை வழங்கினார்.

இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் சேகரன், கூத்தாப்பார்  பேரூர் கழக செயலாளர் தங்கவேல், வடக்கு ஒன்றிய செயலாளர் கருணாநிதி, கூத்தாப்பர் பேரூராட்சி தலைவர் செல்வராஜ், கூத்தப்பர் பேரூராட்சி துணைத் தலைவர் பழனியண்ட்டி உட்பட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.