அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் பாராட்டு

0 451
Stalin trichy visit

திருச்சி, ஏப்.19  திருச்சி மாவட்டம், லால்குடி அருகே எசனைக்கோரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவ மாணவிகள் இவ்வாண்டு தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகைத் தேர்வில் வெற்றிப் பெற்றவர்களை லால்குடி தொகுதி் சட்டமன்ற உறுப்பினர் அ. செளந்தரபாண்டியன் பாராட்டி வாழ்த்தினார்.

தேர்வில்  எசனைக்கோரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவ மாணவிகள்
அஸ்விகா தாரேஷ் , சாதனா , இஸ்பா சாய்ரா ஆகிய 4 பேர்வெற்றி பெற்று ஆண்டிற்கு 12 ஆயிரம் வீதம் 9, 10, 11, 12 ஆகிய 4 ஆண்டுகளுக்கு ரூ 48000 /-பெறத் தகுதி பெற்றுள்ள.
மாணவர்களை லால்குடி சட்டமன்ற உறுப்பினர் அ.சௌந்தரபாண்டியன்  வாழ்த்தி,பாராட்டினார்.

இந்நிகழ்வில்  தலைமை ஆசிரியர் திருமாவளவன், உதவி ஆசிரியைகள்
கீதா , மேரி கிறிஸ்டினா, செல்வி ஆகியோருடன் லால்குடி தெற்கு ஒன்றியப் பொருளாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.