போதை மாத்திரை விற்ற 5 வாலிபர்கள் கைது

0 471
Stalin trichy visit

திருச்சி, ஏப். 18 திருச்சி, சட்டிபானை தெரு அருகே நேற்று கோட்டை போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கிருந்த வாலிபர்களை அழைத்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் திருவள்ளுவர் நகர், கீழ ஆண்டாள் வீதியை சேர்ந்த அரசகுமார் (வயது21), சிந்தாமணி, காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணன் (வயது22) மற்றும் குடமுருட்டி, காந்தி தெருவைச் சேர்ந்த கவுதம் (வயது20) என்பதும் இவர்கள் அங்கு போதை மாத்திரைகள் விற்றதும் தெரிந்தது. இதையடுத்து கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அவர்களிடமிருந்து 30 தாபென்டடால் போதை மாத்திரை, 1 மருத்துவ ஊசி மற்றும் 1 தண்ணீர் பாட்டில் பரிமுதல் செய்ப்பட்டது. இதேபோல் உறையூர், பாண்டமங்கலம் அருகே உறையூர் போலீசார் நேற்று ரோந்து சென்றனர் அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

இதில் அவர்கள் உறையூர் பாண்டமங்கலத்தை சசேர்ந்த ஹூசைன் பாட் (வயது26) மற்றும் உறையூர், வெக்காளியம்மன் நகரைச் சேர்ந்த ஆழுடை நம்பி (வயது20) என்பதும், அங்கு இவர்கள் போதை மாத்திரை விற்றதும் தெரிந்தது. 2 பேரையும் உறையூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்களிடமிருந்து 20 தாபென்டடால் போதை மாத்திரை, 6 மருத்துவ  ஊசிகள், 1 செல்போன் மற்றும் 2 ஸ்கூடர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.