பொன்மலையில் இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை
திருச்சி ஏப்.19 திருச்சி மேல கல் கண்டார் கோட்டை பரமசிவம் தெருவை சேர்ந்தவர் கோபிநாத்.இவரது மகன் அஜய் (வயது 24) குடும்ப பிரச்சினை காரணமாக தந்தை கோபிநாத்தை பிரிந்து தாய் சகிலாவுடன் தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில் சம்பவத்தன்று அஜய் தனது நண்பருடன் சேர்ந்து மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. அப்பொழுது வீட்டிலிருந்த தாய் சகிலா குடித்து விட்டு ஏன் வந்தாய் என்று கேட்டு அஜயை சத்தம் போட்டதாக தெரிகிறது.இதில் கோபமடைந்த அஜய் தாய் சகிலாவை தாக்கியுள்ளார்.
இதனால் கோபித்துக் கொண்டு தாய் சகிலா வேதாரண்யத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார்.இதனால் வீட்டில் தனியாக இருந்த அஜய் நேற்று அறையில் மின் கொக்கியில் சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து தகவலறிந்து வீட்டுக்கு வந்த தாய் சகிலா அஜய் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சிடைந்தார்.
இது குறித்து உடனடியாக பொன்மலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தூக்கில் பிணமாக தொங்கிய அஜய் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து சகிலா பொன்மலை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.