ஓடும் பஸ்சில் வியாபாரிடம் செல்போன் பறித்தவர் கைது

0 1,980
Stalin trichy visit

திருச்சி ஏப் 19- கரூர் மாவட்டம் குளித்தலை கே.பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தினகரன் (வயது 42 )இவர் திருச்சி காந்தி மார்க்கெட்டில் வாழைப்பழம் வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று மதுரை ரோடு பஸ் நிறுத்தம் நின்று சத்திரம் பேருந்து நிலையம் செல்லும் பஸ்சில் ஏறி பயணம் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது இவர் அருகில் நின்ற ஒரு வாலிபர் தினகரன் சட்டை பாக்கெட்டில் இருந்து செல்போனை பறித்துக் கொண்டு அங்கிருந்து ஓட முயன்றார்.இதையடுத்து அந்த வாலிபரை பிடித்து கோட்டை போலீசில் ஒப்படைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து கோட்டை போலீசார் வாலிபரிடம் விசாரணை செய்த போது அவர் அரியமங்கலம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த மணிகண்டன் (வயது 31) என்பது தெரிய வந்தது, இதையடுத்து கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து அவரிடமிருந்து செல்போனை பறிமுதல் செய்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.