கட்டிட பொருட்களை திருடிய இரண்டு சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைப்பு

0 859
Stalin trichy visit

திருச்சி ஏப்19 – சென்னையைச் சேர்ந்தவர் கணேஷ் ராஜா (வயது 26) இவர் திருச்சி தென்னூர் ஹை ரோடு பகுதியில் புதிதாக கட்டிடம் கட்டி வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று பணிகளை முடித்துவிட்டு கட்டிடத்தை பூட்டிவிட்டு திருச்சியில் தங்கி உள்ள வீட்டுக்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் நேற்று கட்டிடத்தை திறக்க வந்த பொழுது பூட்டி இருந்த கட்டிடம் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பிறகு உள்ளே சென்று பார்த்த பொழுது அங்கு இரண்டு சிறுவர்கள், ஒரு வாலிபர் என மூன்று பேர் அங்கு இருந்த கட்டிடப் பொருட்களை திருடிக் கொண்டிருப்பது பார்த்து அதிர்ச்சிடைந்தார்.

இதையடுத்து உடனடியாக அவர் தில்லைநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து தில்லைநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு திருடிக்கொண்டிருந்த இரண்டு சிறுவர்களை கையும் களமாக பிடித்தனர்.

போலீசார் வருவதை தெரிந்து கொண்ட வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதையடுத்து தில்லை நகர் போலீசார் பிடிபட்ட இரண்டு சிறுவர்களை திருச்சி கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து தில்லைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து ரூ 30 ஆயிரம் மதிப்புள்ள கட்டிடப் பொருட்களையும், ரூ 20 ஆயிரம் பணத்தையும் பறிமுதல் செய்துள்ளார்கள்.

Leave A Reply

Your email address will not be published.