திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டு பணம் பறிமுதல்

0 325
Stalin trichy visit

திருச்சி ஏப்.24 திருச்சி விமான நிலையத்திலிருந்து மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு ஏர் ஏசியா விமானம் புறப்பட தயாரானது.அதில் பயணம் செய்ய இருந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.அப்போது ஒரு பயணி தனது லக்கேஜில் இந்திய மதிப்பில் ரூபாய் 16 லட்சத்து 52 ஆயிரம் அமெரிக்க டாலர்களை வைத்திருந்தது தெரியவந்தது.இதனையடுத்து அந்த பயணியை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள், வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.அவர் குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக பணம் வைத்திருந்தார்.அதற்குரிய எந்த ஆவணமும் அவரிடம் இல்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.