கார் டிரைவர் தூக்கிட்டுத் தற்கொலை
திருச்சி ஏப். 24- திருச்சி பொன்மலை தங்கேஸ்வரி நகர் வடக்கு தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவரது மகன் பார்த்திபன் (வயது 31 ) .கார் டிரைவர். குடிப்பழக்கம் உடையவர். இவர் கிருஷ்ணவேணி (வயது 27) என்பவரை காதலித்து ஐந்து வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததால் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த விரக்தியில் பார்த்திபன் வீட்டில் மின்விசிறியில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதை பார்த்த மனைவி மற்றும் அக்கம் பக்கத்தினர் பார்த்திபனை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் பரிசோதித்த டாக்டர்கள் பார்த்திபன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பொன்மலை போலீசார் வழக்கு பதிந்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனை பிரேத கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.