“உயிருக்கு ஆபத்து காப்பாற்றுங்கள்” என கழுத்தில் சிலேட்டுடன் வந்த மூதாட்டியால் பரபரப்பு!
திருச்சி சோமரசம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் நாகலட்சுமி. 82 வயது மூதாட்டியான இவர் அப்பகுதியில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் அவரது மகள் இவரது வீட்டில் கணவரோடு வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் மகள் தன்னை துன்புறுத்துவதாகவும், வீட்டில் உள்ள பொருட்கள் பணத்தை சாவி போட்டு திருடிக்கொள்வதாகவும், கேட்டால் அடித்ததாகவும் கொலை மிரட்டல் விடுப்பதாகவும், இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு “உயிருக்கு ஆபத்து காப்பாற்றுங்கள்” என சிலேட்டு டன் கழுத்தில் அணிந்து கொண்டு தனது மகனுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தார். இச்சம்பவம் சிறிது நேரம் மாவட்ட ஆட்சியரகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.