திருச்சி மாநகர பகுதிக்கு உட்பட்ட துரைசாமிபுரம் பகுதியில், அடிக்கடி இரு சக்கர வாகனங்கள்,
மிதிவண்டிகள் களவு போவது வழக்கமான ஒன்றாக இருந்து வந்த நிலையில், தற்போது
புறாகூண்டுகள், முயல், நாய்க்குட்டி ஆகிய வளர்ப்பு பிராணிகளின் கூண்டுகளை கூட கொள்ளையர்கள் விட்டு வைக்கவில்லை என துரைசாமிபுரம் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், “துரைசாமிபுரம் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதி. இங்கு இரு சக்கர வாகனங்கள், மிதிவண்டி கொள்ளை சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்ததால் தற்போது பெரும்பாலான வீடுகளில் சிசிடிவி கேமரா பொருத்தி உள்ளோம்.
ஆனாலும் அருகில் டாஸ்மாக் கடை இருப்பதால் மது பிரியர்கள் மது வாங்குவதற்காக பட்டப்பகல் என்று கூட பார்க்காமல் நாங்கள் வைத்திருக்கும் பூச்செடிகள், புறா கூண்டு, ஏன்?!!
செருப்பை கூட சில சமயங்களில் களவாடி செல்கின்றனர். இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்க எங்களுக்கு தயக்கமாக உள்ளது என்கின்றனர்.
எனவே போலீசார் உடனடியாக இந்த விஷயத்தை கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.