வாரந்திர குறை தீர்க்கும் நாளில் 526 மனுக்கள் பெறப்பட்டது; மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்!

0 285
Stalin trichy visit

திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற வாரந்திர பொது மக்கள் குறை தீர்க்கும் நாளில் வாட்ஸ் அப் செயலி மற்றும் மனு பெட்டி மூலம் 526 மனுக்கள் பெறப்பட்டது.

இலவச வீட்டு மனை பட்டா, ஆக்கிரமிப்பை அகற்றக் கோரியது, பட்டா மாறுதல், சாதி சான்றிதழ்கள், இதர சான்றிதழ்கள் மற்றும் நிலம் தொடர்பான 126 மனுக்களும், குடும்ப அட்டை தொடர்பாக 18 மனுக்களும், முதியோர் உதவித்தொகை, விபத்து நிவாரணத் தொகை, மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள் மற்றும் விதவை உதவித்தொகை கோரி 96 மனுக்களும், ரோடு, தெரு விளக்கு, தண்ணீர் இணைப்புக் குழாய், பஸ் வசதி, தொகுப்பு வீடு மற்றும் இதர அடிப்படை வசதிகள் கோரியும், புகார் தொடர்பாக 42 மனுக்களும், கல்வி உதவி தொகை வங்கிக் கடன் மற்றும் இதர கடன் வசதிகள் கோரியும் மனுக்களும், திருமண உதவித்தொகை இலவச தையல் இயந்திரம் பெண் குழந்தை திட்டம் சலவைப்பெட்டி தொடர்பாக 16 மனுக்களும், 157 இதர மக்களும் என மொத்தம் 577 மனுக்கள் பெறப்பட்டு மனுக்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பி உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.