எ.புதூரில் நவீன வசதிகளுடன் கூடிய மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி திறப்பு

0 292
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 4 திருச்சி எடமலைப்பட்டி புதூரில் ரூ.18.41 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர்நிலைப்பள்ளியை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் திறந்து வைத்தனர்.
திருச்சி மாநகராட்சிகுட்பட்ட 57ஆவது வார்டு, எடமலைப்பட்டிபுதூரில் ராஜீவ் காந்தி நகரில் புதிய உயர் நிலைப்பள்ளி கட்டிடம் ரூ.18.41 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. அனைத்து பணிகளும் நிறைவுற்ற நிலையில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் இன்று திறந்து வைத்தனர். பள்ளியின் சிறப்புகள் : புதிதாக கட்டப்பட்டுள்ள இந்த கட்டிடத்தில் தரைதளம், முதல் தளம் என பிரிக்கப்பட்டு, தரை தளத்தில் 16 வகுப்பறைகளும், முதல் தளத்தில் 16 வகுப்பறைகளும், நிர்வாக அறை 2 என்ற எண்ணிக்கை யிலும், ஆசிரியர்கள் அறை தரை தளத்தில் 2, முதல் தளத்தில் 2 ஆம், ஆய்வகம் தரை தளத்தில் ஒன்றும், முதல் தளத்தில் 3ஆ ம், கழிப்பறைகள் தரை தளத்தில் 2 ஆம், முதல் தளத் தில் 2ம், விழா மேடை ஒன்றும், படிகட்டுகள் தரை தளத்தில் 4 ஆம், முதல் தளத்தில் 4 ஆம், 571மீ சுற்றுச் சுவர் என மொத்தம் 2.91 ஏக்கர் பரப்பளவில் இந்த பள்ளி வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. தரை தளம் 34424.03 ச.அடியும், முதல் தளம் 34424.03 ச.அடியும் என மொத்தம் 12797.04 ச.அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.
நவீன கற்றல் கற்பித்தல் தொழில்நுட்பங்களுடன், பல்கலைக்கழக வளாகத்திற்கு இணையாக இப்பள்ளி வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. மிகச்சிறப்பான கற்றல் சூழலில் பயிலவுள்ள அனைத்து மாணவர்களுக்கும், கற்பிக்கவுள்ள ஆசிரியப் பெருமக்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண்நேரு, மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் சரவணன், நகரப் பொறியாளர் சிவப்பாதம், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உடனிந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.