எதிர்ப்புகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் இடையே வெளியான தக் லைஃப் திரைப்படம்
திருச்சி, ஜூன் 5 எதிர்ப்புகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் இடையே வெளியான தக் லைஃப் திரைப்படம் – திருச்சியில் ரசிகர்கள் வெடி வெடித்து கொண்டாட்டம்
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன், சிலம்பரசன், திரிஷா அபிராமி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்த தக் லைஃப் திரைப்படம் கர்நாடகா தவிர்த்து உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று வெளியாகி உள்ளது
திருச்சி சோனா மீனா திரையரங்கில் வெளியாகி உள்ள திரைப்படத்தை கமல் ரசிகர்கள் மற்றும் திருச்சி கிழக்கு, மேற்கு மாவட்ட மக்கள் நீதி மைய நிர்வாகிகள் திரைப்பட வெளியீட்டை பட்டாசு வெடித்து கொண்டாடினர்
இந்தத் திரைப்படம் மாபெரும் வெற்றி அடையும் எனவும் கமலஹாசன் தன்னுடைய இளைய நடிகருக்கு மிகப்பெரும் வாய்ப்பு வழங்கியுள்ளார் எனவும்
கமல் மேடையில் பேசியது குறித்து மன்னிப்பு கேட்டால் மட்டுமே கர்நாடகாவில் வெளியிடப்படும் என்ற நிலையில் அன்பு எப்பொழுதும் மன்னிப்பு கேட்காது என கமல் கூறி உள்ளார் அவர் கூறியது மிகவும் சரியானது இந்த திரைப்படம் மிகப் பெரும் வெற்றி அடையும் என தெரிவித்தனர்