கணேசபுரத்தில் உள்ள சன்மார்க்க மடத்தில் தங்கி ஆன்மீகத்தில் ஈடுபட்ட முதியவர் திடீர் சாவு
கோயம்புத்தூர் மாவட்டம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் சிவஜெயக்குமார்(வயது 67). இவர் சுங்கம் மற்றும் கலால் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். மேலும் இவரது மனைவி விஜயலட்சுமி(62) இவரும் அதே துறையில் பணியாற்றி உள்ளார். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த 25 ஆண்டு காலமாக இருவரும் பிரிந்து வாழ்ந்துள்ளனர்.
இந்நிலையில் சிவஜெயக்குமார் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருவெறும்பூர் அருகே கணேசபுரத்தில் உள்ள சன்மார்க்க மடத்தில் தங்கி ஆன்மீகத்தில் ஈடுபட்டு உள்ளார். இந்நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு கணேச புரத்திலேயே ஒரு வாடகை வீடு எடுத்து அதில் வசித்து வந்துள்ளார்.
மேலும் நேற்று முன்தினம் வீட்டிலேயே திடீரென இறந்து கிடந்துள்ளார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். மேலும் இத்தகவலை அறிந்த திருவெரும்பூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த சிவஜெயக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.