விவசாயிகள் கடன்பெறுவதற்கு சிபில் ஸ்கோர் கேட்கும் கூட்டுறவு வங்கிகள் : ஆட்சியரிடம் மனு

0 2,468
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 10 வேளாண் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் கடன்பெறுவதற்கு சிபில் ஸ்கோர் கேட்கும் அவலம் – விவசாயிகள் கடன்பெறக்கூடாது என்ற கூட்டுறவுதுறையின் அறிவிப்பை ரத்துசெய்யகோரி பல்வேறு விவசாய சங்கத்தினர் மனு

வேளாண் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் தாங்கள் செய்த சாகுபடி பயிர்களின் அடிப்படையில் தற்காலிக கடன் பெற்று விவசாயம் செய்கின்றனர். இதில் தற்காலிக குத்தகை சாகுபடியாளர், கோவில்நிலம், அரசு சார்ந்த நிலம் மற்றும் தனியார் நிலங்களில் விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர்.

அதில் அவர்களுக்கு நிலத்தின் பேரில் ஆதாரப்பூர்வமாக எந்த அடிப்படை உரிமையும் இல்லாமல் கிராம நிர்வாகிஅதிகாரி தரும் அடங்கல் அடிப்படையில் வேளாண் கூட்டுறவு சங்கங்களில் கடன்பெற்று மகசூல் காலத்திற்குப் பிறகு கடன்தொகையை அடைகின்றனர்.

வேளாண் கூட்டுறவு சங்கப்பதிவாளர் அவர்கள் தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், விவசாயிகள் மற்றும் குறுத்தொழில் செய்பவர்கள் பெறும்கடன், அவர்கள் பெயரில் வங்கியில் சிபில் ஸ்கோர் (தனியார் வங்கிகள், தேசிய வங்கிகள், மத்திய மாநில அரசினால் பதிவுசெய்து கடன் வழங்குபவர்கள் போன்றவர்களிடம்) எந்தஒரு சிறுகடனும் நிலுவையில் இருந்தால் கடன்பெற இயலாதநிலையை அடைகின்றனர்.

இந்த சுற்றறிக்கையின் மூலம் விவசாயிகள் கடன்பெற இயலாதநிலை அடைகின்றனர். பெரு மற்றும் தொழில், சிறுதொழிற்சாலை தொடங்குபவர்களிடம் மட்டுமே பெறப்படும் சிபில் ஸ்கோர் வெளியே எங்கும் கடன் நிலவையில் இல்லை என்ற சான்று விவசாயிகளிடம் கேட்பது விவசாயிகளை முழுமையாக கடன்பெறுவதில் இருந்து அகற்றுவதற்கான ஒருமுயற்சியாக விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.ஆதலால் விவசாயிகளுக்கு எந்தவித நிபந்தனையும்
இன்றி தாங்கள் செய்யும் சாகுபடி பயிர்களுக்கு கடன் வழங்க தமிழக முதலமைச்சர் உரியநடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மூலம் தமிழக முதல்வர் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பல்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் நேற்று  மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.