சமுத்திரம் ஊராட்சியில் நெல்கொள் முதல் செய்ய அரசு அலுவலர்கள் நடவடிக்கை
திருச்சி, ஜூன் 10 சமுத்திரத்தில் ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க உபகரணங்களை வைத்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை ஒன்றியம் சமுத்திரத்தில் ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என்று விவசாயிகள் தங்களது நெல்மணிகளை கொட்டினர். இதற்கு பாதுகாப்பாக அரசு வழங்க வேண்டிய தார்பாய்கள் எதுவும் இல்லாமல் தங்களால் முடிந்த வரை நெல்மணிகளை பாதுகாத்து உள்ளார்கள். கிட்டத்தட்ட 20 நாட்களுக்கு மேல் சமுத்திரம் ஊராட்சியில் நெல் கொள்முதல் செய்யப்படும் இடத்தில் கொட்டி உள்ளார்கள். இதுவரை எந்த ஒரு அரசு அதிகாரிகளும் கவனத்திற்கு ஈர்க்கப்படவில்லை.
நெல்கொள்முதல் செய்யாததைக் கண்டித்து நேற்று (ஜூன் 9) காலை மரவனுர் தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து பாஜக சார்பாக பஸ் மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தனர்.
இதனை அறிந்த அரசு சமுத்திரத்தில் நேரடி நெல்மணிகளை அரசு அலுவலர்கள் நெல் கொள்முதலுக்கான உபகரணங்களை இறக்கி வைத்துள்ளார்கள் இதை பார்த்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தார்கள் இதனை அடுத்து அரசு அதிகாரிக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கு அரசுக்கும் பா.ஜ.க. நிருவாகி சித்தநத்தம் சுப்ரமணி மற்றும் கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.