திருச்சியில் புதிதாக கட்டப்பட்ட நூலகக் கட்டிடம் திறப்பு
திருச்சி, ஜூன் 10 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் பொது நூலக இயக்கம் சார்பில் ரூ.29.80 கோடி செலவில் அனைத்து மாவட்டங்களிலும் கட்டப்பட்டுள்ள 110 கூடுதல் நூலகக் கட்டடங்கள் மற்றும் 70 சிறப்பு நூலகங்களை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து திருச்சி கே.கே.நகர் அருகிலுள்ள தென்றல் நகரில் புதிதாக கட்டுப்பட்டுள்ள நூலக கட்டிடத்தில் நடைபெற்ற விழா நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் கலந்து கொண்டு புதிய நூலகக் கட்டிடத்தினை பார்வையிட்டார். இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் சரவணன், மாவட்ட நூலக அலுவர் சரவணக்குமார், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.