துவாக்குடி அரசு மருத்துவமனையை கண்டித்து போராட்டம்

0 336
Stalin trichy visit

திருவெறும்பூர் தாலுகா அரசு மருத்துவமனையில் இரவு நேரங்களில் வெளியில் இருந்து அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் அலட்சியம் கட்டுவதாக மற்றும் மருத்துவமனையில் போதிய மாத்திரைகள் கிடைக்கவில்லை என கூறி மருத்துவமனை முன்பு இந்திய கம்யூனிஸ்ட்  கட்சி தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் பதாகைள் ஏந்தி போராட்டத்தில் ஈடுப்பட்டதால் பரப்பரப்பு ஏற்பட்டது.

திருவெறும்பூர் தாலுகா அரசு மருத்துவமனை துவாக்குடியில் உள்ளது.

இந்த மருத்துவமனையில் திருவெறும்பூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஏராளமான ஏழை எளிய பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் நோய்களிலிருந்து தீர்வு காண்பதற்காக வந்து செல்கின்றனர். மேலும் துவாக்குடி திருவெறும்பூர் பெல் நவல்பட்டு உள்ளிட்ட காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பொதுமக்களுக்கு ஏற்படும் அவசர சிகிச்சை மற்றும் சாலை விபத்து ஆகியவற்றிற்கு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு தான் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் சாலை விபத்துகளில் சிக்குபவர்களுக்கு தேவையான உயர் சிகிச்சை அளிக்கக்கூடிய நவீன வசதிகளும், மருத்துவர்கள் மருத்துவமனையில் போதிய அளவு இல்லை.

இந்நிலையில் சாலை விபத்துகளில் சிக்குபவர்களுக்கு முதல் கட்ட சிகிச்சை மட்டுமே அளித்துவிட்டு மேற்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர். அப்படி அனுப்பி வைக்கும் பொழுது கால விரயம் அதிகமாகிறது இதனால் பலர் தங்களது இன்னுயிரையும் இழந்து வருகின்றனர்.

இது ஒரு தொடர்கதையாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் மருத்துவமனை முன்பு பதாகைகள் ஏந்தி  போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது அவரிடம் கேட்ட பொழுது நோயாளிகளுக்கு போதிய மாத்திரைகள் கிடைக்கவில்லை அப்படி கொடுத்தாலும் பாதி மாத்திரைகள் கொடுக்கப்படுகிறது அதுமட்டுமின்றி நோயாளிகளுக்கு அலைக்கழிக்கப்படுகிறார்கள் அது மட்டும் இன்றி இரவு நேரங்களில் மருத்துவர்கள் இல்லாமல் அங்கு இருக்கும் செவிலியர்கள் சிகிச்சை அளிப்பதாக மேலும் நோயாளிகளை அலட்சியப்படுத்துவதாகவும் இதனை அரசுக்கு கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ன கோரி
துவாக்குடி அரசு மருத்துவமனையை கண்டித்து அரசு மருத்துவமனை முன்பு முன்பு அமர்ந்து கவன ஈர்ப்பு தர்ணப் போராட்டத்தில் ஈடுப்பட்டதாக தெரிவித்தார்.

இந்த நிலையில் இந்த இச்சம்பவம் பற்றி துவாக்குடி போலீசாருக்குதகவல் கிடைத்தது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தை ஈடுபட்ட ராதாகிருஷ்ணனிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

இந்நிலையில் ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இதனால் சிறிது நேரம் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது

Leave A Reply

Your email address will not be published.