100 நாள் வேலை திட்டத் தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்

0 244
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 20  மணப்பாறை அருகே 100 நாள் வேலை திட்டத்தை முறையாக வழங்கிடவில்லை என்று கூறி தொழிலாளர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கருப்பூர் ஊராட்சிக்குட்பட்ட கருத்தகோடங்கிப்பட்டியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் முறையாக பணி வழங்கப்படுவதில்லை எனவும், பணி வழங்கினாலும் பாறை உள்ள இடத்தில் வெட்டச் சொல்வதாகவும், பணி செய்தாலும் 150 ரூபாய் மட்டுமே வழங்குவதாகவும், சம்மந்தப்பட்ட ஓவர்சியர் முறையாக பேசுவதில்லை என்று கூறி சம்மந்தப்பட்ட பகுதி 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் சேர்ந்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.