திருச்சியில் ரயில்வே திட்டப்பணிகள் குறித்து துரை வைகோ எம்.பி. ஆய்வு

0 324
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 21  திருச்சி தொகுதி மக்களின் இரயில்வே துறை சார்ந்த நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றித்தந்திட ஒன்றிய இரயில்வே துறை அமைச்சர்  அஸ்வினி வைஷ்ணவ் , இரயில்வே உயர் அதிகாரிகளையும் சந்தித்து, கோரிக்கை வைத்து, ஒப்புதல் பெறப்பட்டு, தொடங்கப்பட்ட மற்றும் தொடங்கப்பட வேண்டிய பணிகளை துரை வைகோ எம்.பி. நேற்று  (20.06.2025) பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

திருச்சி சஞ்சீவி நகரில் அமைய உள்ள இரயில்வே மேம்பாலம் (ROB) கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்டார்.  முன்னதாக இப்பகுதிக்கு வந்தபோது, அருகிலுள்ள மற்றொரு இரயில்வே கேட் பகுதியில் வாகன சுரங்கப்பாதை அமைக்க வேண்டுமென உள்ளூர் மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இப்பகுதியில் மேம்பாலமும் சுரங்கப்பாதையும் ஒரே இடத்தில் அமைப்பதற்குப் பதிலாக, அருகிலுள்ள மற்றொரு இரயில்வே கிராசிங்கில் சுரங்கப்பாதையை அமைக்க வேண்டுமென திருச்சி இரயில்வே கோட்ட மேலாளரைச் சந்தித்து மனு அளித்தேன். ஆய்வுக்குப் பிறகு, எனது கோரிக்கையை ஏற்றுக்கொண்டனர்.

தற்போது, மேம்பாலக் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதேபோல் அருகில் உள்ள சுரங்கப்பாதைக்கு உண்டான கட்டுமானப்பணியை போக்குவரத்திற்கு இடையூறு இல்லாத இடங்களில் இப்போதே தொடங்கிட வேண்டுமாய் கேட்டுக்கொண்டேன். அதற்கு இரயில்வே துறையினர் ஒப்புதல் தெரிவித்தனர். இதற்கான வரைபடத்தைப் பார்வையிட்டு, விளக்கங்களையும் கேட்டறிந்தேன்.

அடுத்ததாக, மேலகுமரேசபுரம் பகுதியில் இரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கு உண்டான சாத்தியக்கூறுகளை, இரயில்வே அதிகாரிகள் தயாரித்துள்ள வரைபடத்தை வைத்து ஆய்வு செய்தேன். அதில் நீர்வளத்துறை சாலை, பஞ்சாயத்து சாலை ஆகிய தமிழ் நாடு அரசு துறை சாலைகள் வருவதாலும், கூடுதல் சவால்கள் உள்ளதாலும் ஒன்றிய இரயில்வே அமைச்சருக்கும், தென்னக இரயில்வே பொது மேலாளருக்கும் கடிதம் எழுதி எடுத்துரைத்து நான் அழுத்தம் கொடுக்கவுள்ளேன். மூன்றாவதாக, மேல்கல்கண்டார்க்கோட்டை பகுதியில் மேம்பாலம் அமைய உள்ள இடத்தை பார்வையிட்டேன்.

மஞ்சத்திடலில், மெமு  பணிமனை கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால், இருபுறமும் உள்ள மக்களுக்கான பாதை அடைபடுகிறது. இதனால் இரயில்வே பணியாளர்கள், அவர்களது குடும்பத்தினர், பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பயணிப்பதற்கு ஏதுவாக, இருபுறமும் உள்ள சாலைகளை இணைக்கும் விதமாக வாகன சுரங்கப்பாதையை அமைக்க கோரிக்கை வைத்தேன். அங்கும் கட்டுமானப் பணிகள் தொடங்க உள்ள நிலையில் அதனையும் பார்வையிட்டேன். அக்கட்டுமானப்பணியின் போது போக்குவரத்திற்கு தடைவிதிக்க கூடாது என்றும், அப்படி அவசியம் ஏற்பட்டால் இரவு நேரங்களில் மட்டும் அடைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். அதனை ஏற்றுக்கொண்டனர். இந்த பணி செப்டம்பர் மாதம் நிறைவடையும் என்றும் உறுதியளித்தனர்.

பிறகு, பொன்மலை கோல்டன் ராக் பணிமனையை சென்னை பெரம்பூர் ICF பணிமனை போல தரம் உயர்த்த கோரிக்கை வைத்திருந்தேன்.

முதற்கட்டமாக, 300 கோடி ரூபாய் மதிப்பில் வந்தே பாரத் மற்றும் மெட்ரோ இரயில்களின் பழுது நீக்கும் பணிமனை அமைக்க ஒன்றிய இரயில்வே துறை ஆரம்பக்கட்ட திட்டம் வைத்துள்ளது. இதனால் வேலைவாய்ப்புகள் பெருகுவதோடு, பல புதிய வந்தே பாரத் இரயில்கள் திருச்சி வழித்தடத்தில் இயக்கப்படும் வாய்ப்பும் நிச்சயம் கூடும். அதனால் பல வகையில் திருச்சி மற்றும் சற்று வட்டாரப்பகுதி வளர்ச்சி அடையும். எனவே அதனை விரைந்து கொண்டுவரவும், ICF போல தரம் உயர்த்துவதற்கு தொடர்ந்து அதற்குண்டான முயற்சிகளை மேற்கொள்வேன்.

இறுதியாக மாரிஸ் மேம்பாலத்தின் பழைய பாலம் இடிக்கப்படாமல் பணிகள் தாமதமாக இருந்ததை அறிந்து, முதல் DISHA கூட்டத்தில் கோரிக்கை வைத்தேன். பின்னர், 23.04.2025 அன்று தென்னக இரயில்வே பொது மேலாளரைச் சந்தித்து விரைவாக நிறைவு செய்யக் கோரினேன். ஜூன் 2025 இறுதிக்குள் பணிகளை முடிப்பதாக இரயில்வே கோட்ட மேலாளர் உறுதியளித்திருந்த நிலையில், 13.05.2025 அன்றே பழைய பாலம் இடிக்கப்பட்டு பணி நிறைவு செய்யப்பட்டது.

அங்கு தற்போது புதிய பாலத்திற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதனையும் பார்வையிட்டேன். இப்பணியை விரைவில் முடித்து புதிய பாலம் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு இரயில்வே துறை அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டேன். அப்போது அதிகபட்சமாக ஜூன் 2026 க்குள் முழுமையாக முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று நம்பிக்கை அளித்தனர்.

இந்த ஆய்வுப் பயணத்தில் திருச்சி மாவட்டக் கழகச் செயலாளர்கள், திமுக முன்னோடிகள், கூட்டணி கட்சியினர், பொதுமக்கள் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.