புதிதாக கட்டப்பட்ட நூலகம் : அமைச்சர் அன்பில் மகேஸ் திறந்து வைத்தார்

0 271
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 25  திருவெறும்பூரில் ரூ.62 இலட்சத்து 52 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நூலகத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

திருச்சி மாநகராட்சி திருவெறும்பூர் 40வது வார்டுக்கு உட்பட்ட பகவதிபுரம் நடுநிலைப்பள்ளி அருகில் 2024-25 ஆம் ஆண்டு நிதியாண்டின் கீழ் பொதுப்பணித்துறை வசம் ஒப்படைக்கப்பட்ட பள்ளி கல்வித்துறையின் கீழ் இயங்கும் பொது நூலகை இயக்ககத்தின் கீழ் ரூபாய் 62 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நூலகத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் ம்கேஸ் பெய்யாமொழி திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் மண்டல குழு தலைவர் மு மதிவாணன் மாமன்ற உறுப்பினர் சிவகுமார், மாநகராட்சி துணை ஆணையர் சரவணன் இளநிலை செயற்பொறியாளர் பிரசாத் 40 வது வார்டு வட்டச் செயலாளர் குணாநிதி மற்றும் அருண்குமார் உட்பட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்‌.

Leave A Reply

Your email address will not be published.