திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி பாலியல் விவகாரம் – ஸ்ரீரங்கம் மகளிர் காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்ட பால் சந்திரமோகனிடம் விசாரணை

0 506
Stalin trichy visit

திருச்சியின் பிரபலமான பிஷப் ஹீபர் கல்லூரியில் பாலியல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் தற்போது அக்கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் பால் சந்திரமோகன் கைது செய்யப்பட்டுள்ளார்.திருச்சி புத்தூரில் உள்ள பிஷப் ஹீபர் கல்லுாரியின் தமிழ்த்துறையில் படித்த சில மாணவிகள், தமிழ்த்துறை தலைவர் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி, 5 பக்க அளவிலான புகார் மனுவை கல்லூரி முதல்வருக்கு அனுப்பியுள்ளனர்.

 

திருச்சி நகரின் புத்தூரில் உள்ள பிஷப் ஹிபர் கல்லூரியில் பணிபுரிந்த தமிழ் துறை தலைவர் மீது தான் இந்த புகார் எழுந்தது. மாணவிகள் அனுப்பியுள்ள புகார் மனுவில் தமிழ் துறை பேராசிரியர் தங்கள் வகுப்பறையில், மிக நெருக்கமாக அமர்ந்து கொண்டு இரட்டை அர்த்தம் வரும்படி கொச்சையாக பேசுவது போன்ற பல்வேறு பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளார். இதுமட்டுமின்றி அவர் செய்த சேட்டைகளை பார்த்து, தலையை குனிந்து கொண்டே வகுப்பறையில் இருந்தோம் என்று தெரிவித்துள்ளனர். மேலும் வகுப்பறையில் குறைந்தளவு மாணவிகள் இருந்தால், தன் அறைக்கு வரச்சொல்லி, கட்டாயப்படுத்துகிறார் என்றும் அதே துறையில் உதவி பேராசிரியராக பணிபுரியும் பெண் ஒருவர், அவரை பார்க்க செல்வதற்கு முன் முகம் கழுவி மேக்கப் போட்டுக் கொண்டு தான் போக வேண்டும் என வலியுறுத்துகிறார் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இதனால் கல்லூரியிலிருந்து வெளியேற விரும்புவதாகவும் தெரிவித்தனர்.புகாரின் அடிப்படையில், வழக்கறிஞர் ஜெயந்திராணி தலைமையிலான குழுவினர், தமிழ்த்துறை தலைவர் பால் சந்திரமோகன், உதவி பேராசிரியர் நளினி உள்ளிட்டோரிடம் விசாரணை செய்து அதன் அறிக்கையை, கல்லுாரி முதல்வரிடம் தாக்கல் செய்தனர். மாணவிகளின் புகார் குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கல்லூரியில் இருந்து  பேராசிரியர் பால் சந்திரமோகன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். முதற்கட்டமாக போலீசார் விசாரணையை தொடர்ந்து நடத்தி வந்தார்கள்.
இந்த விவகாரம் தொடர்பாக பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வழுத்தது. இதைத் தொடர்ந்து மாவட்ட சமூக நல அலுவலகம் தானாக முன் வந்து விசாரனையை துவங்கியது.திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு நேரடி பார்வையில், மாவட்ட சமூக நல அலுவலரின் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை மாவட்ட சமூக நல அலுவலகம் அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரை அடுத்து திருச்சி மாவட்ட சமூக நல அலுவலர் தமிமுன் சா கொடுத்த புகாரின்
பேரில் பால் சந்திரமோகன் மீது ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் இந்திய தண்டனை சட்டம் 294 (b) 354 (A) ( D)509, 109 மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 5 சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து தற்போது மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் பால் சந்திரமோகன் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து அவரை ஸ்ரீரங்கம் மகளிர் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.