வண்ணாங்கோவிலில் புறநகர் பேருந்துகள் நின்று செல்ல வேண்டும் – ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ. கோரிக்கை
திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நவலூர் குட்டப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட வண்ணாங்கோவில் பகுதி அமைந்துள்ளது.
இப்பகுதியிலிருந்து நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில் உள்ள வண்ணாங்கோவிலில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்திற்கு மணப்பாறை, வையம்பட்டி ஒன்றிய பகுதிகளில் உள்ள மக்கள் வந்து செல்ல வசதியாகவும், காவல் நிலையம் மற்றும் விவசாய பண்ணைக்கு பொதுமக்கள் வந்து செல்ல வசதியாக வண்ணங்கோவில் பேருந்து நிலையத்தில் திருச்சி – மணப்பாறை – திண்டுக்கல் வழியாக செல்லும் புறநகர் பேருந்துகள் நின்று செல்ல வேண்டுமெனவும், அதேபோன்று இனாம்குளத்தூர் செல்லும் நகரப் பேருந்துகள் குட்டப்பட்டிற்குள் சென்று வரவேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பொது மேலாளருக்கு ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏ பழனியாண்டி கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் பொது மேலாளரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படுவதாக பொது மேலாளர் தெரிவித்தார்.