உலக வெறிநோய் தடுப்பு தினம் – திருச்சியில் 32 நாய்களுக்கு தடுப்பூசி!
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட சுப்பிரமணியபுரம் கால்நடை மருந்தகத்தில் நடந்த இலவச வெறிநோய் தடுப்பூசி முகாமில் திருச்சி கோட்ட கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் மருதைராஜ் மேற்பார்வையில் நோய்கள் குறித்த விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
விலங்கு வழி பரவும் நோய்களில் ஒன்றான வெறிநோய் குறித்து துண்டு பிரசுரம் செல்லப்பிராணிகள் வளர்ப்போருக்கு வழங்கப்பட்டது. மேலும் நாய்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் நோய்கள் பற்றிய பாதுகாப்பு மற்றும் தடுப்பு முறைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

முகாமில் கால்நடை மருந்தகத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 24 நபரிடம் இருந்து கொண்டுவரப்பட்ட 32 நாய்களுக்கு இலவச வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டது இம்முகாமில் ஸ்ரீரங்கம் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் கணபதி பிரசாத் கால்நடை உதவி மருத்துவர் கணேஷ்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.