திருச்சி விமான நிலையத்தில் மாநகர காவல் ஆணையர் ஆய்வு!
திருச்சி மாநகர காவல் ஆணையரும், விமான நிலைய ஆணைய குழு தலைவருமான கார்த்திகேயன் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் பாதுகாப்பு தொடர்பாக இன்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் விஐபி வழி, பயணிகள் பொது வழிகள் மற்றும் ரன்வே, பழைய டெர்மினல் மற்றும் விமான சிக்னல் அறைக்கு சென்று பார்வையிட்டார். தங்கம் கடத்தல் தொடர்பாக விசாரித்த பின்னர், விமான நிலைய இயக்குனர் தர்மராஜ், விமான நிலைய பாதுகாப்பு படை துணை கமாண்டர் தயாளன் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆய்வின்போது துணை ஆணையர் சக்திவேல், பொன்மலை உதவி ஆணையர் காமராஜ் உடனிருந்தனர்.
பின்னர் திருச்சி புதுக்கோட்டை சாலையில் உள்ள ஏர்போர்ட் சோதனை சாவடியை பார்வையிட்ட அவர் அங்குள்ள பதிவேடுகளை பார்வையிட்டதுடன் போலீசாருக்கு அறிவுரை வழங்கினார்.