பள்ளி மாணவரிடம் செல்போன் பறித்தவர் கைது
திருச்சி ஜூலை 14 திருச்சியில் பள்ளி மாணவனிடம் கொலை மிரட்டல் விடுத்து செல்போன் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர் கைது . மேலும் இருவர் தப்பியோட்டம் போலீசார் விசாரணை
திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமினி குற்றத் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறார். அந்த நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக 24 மணி நேரமும் போலீசார்
கஞ்சா, போதை பொருள் விற்பனைகளில் ஈடுபடுவோரை கண்காணித்து சட்டபூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை திருச்சி எடமலைப்பட்டி புதூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட
கிராபட்டி இருப்புப் பாதையில் வாலிபர்கள் மூவர் அமர்ந்து வழிப்போக்கர்களை
மிரட்டியதாக கூறப்படுகிறது.
அப்போது அப்பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு பயிலும் பிரவீன்குமார் (வயது 15)
என்பவரிடம் கத்தி, பிளேடை காட்டி கொலை மிரட்டல் விடுத்து மாணவனின்
செல்போனை பறித்துக் கொண்டு ஓடியதாக கூறப்படுகிறது.
இது குறித்து மாணவனின் தந்தை முத்துக்குமார் எடமலைப்பட்டி புதூர் காவல் நிலையத்தில்
கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அப்போது அந்த மூவரில் ஒருவரான சென்னை மீனம்பாக்கத்தைச் சேர்ந்த குமார் என்பவரது மகன் கார்த்திகேயன் (வயது 19) என்ற வாலிபர் மட்டும் சிக்கிய நிலையில் மற்ற இருவரும்
தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.