திருச்சியில் புதிய படிப்பகம் : துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார்
திருச்சி, ஜூ 14 திருச்சியில் புதிய படிப்பகம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
திருச்சி வரகனேரி பகுதியில் 1952-ல் முன்னாள் அமைச்சரும், ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட கழக செயலாளராக பணியாற்றிய அன்பில் தர்மலிங்கம் தலைமையில் தந்தை பெரியாரால் திறக்கப்பட்ட பிரான்சிஸ் படிப்பகத்தை திருச்சி மாநகராட்சி சார்பில் 26.60 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கும் பணி நடைபெற்றது சீரமைக்கப்பட்ட புதிய பிரான்சிஸ் படிப்பகத்தை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் முன்னிலையில் கட்டப்பட்டுள்ள பிரான்சிஸ் படிப்பக கட்டிடத்தை தமிழக விளையாட்டுத்துறை அமைச்சரும், துணை முதல்வருமான உதயநிதிஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் திருச்சி மாநகராட்சி ஆணையர் மதுபாலன், மாநகராட்சி மேயர் அன்பழகன், துணை மேயர் திவ்யா, மண்டல தலைவர்கள் மதிவாணன், ஜெயநிர்மலா, துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.