சூரியூரில் ஜல்லிக்கட்டு மைதானம் கட்டுமான பணி: அமைச்சர் அன்பில் மகேஸ் ஆய்வு
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், சூரியூரில் கட்டப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு மைதான கட்டுமான பணிகளை பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் ர.ராஜலட்சுமி, திருச்சி வருவாய் கோட்டாட்சியர் அருள், ஒன்றிய கழகச் செயலாளர் கங்காதரன் மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.