தமிழகத்தில் புரிதல் இல்லாமல் தான் அரசியல்வாதிகள் பேசி வருகின்றனர்; அண்ணாமலை கடும் தாக்கு

0 383
Stalin trichy visit

இந்து முன்னணி கட்சி நிறுவிய வீரத்துறவி.ராம கோபாலன் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி சீராத்தோப்பில் அமைந்துள்ள நினைவிடத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் பேசுகையில், சுதந்திர போராட்ட காலகட்டத்தில் பிறந்து பல்வேறு நல்ல விஷயங்களை சந்தித்தவர் ராம கோபாலன் திராவிட கழகத்தை பார்த்தவர். கடந்த 1980ல் மீனாட்சிபுரம் பிரச்சினையின் போது மதம் மாறுவதற்கு என்ன காரணம் என்பதை ஆராய்ந்தவர்.

ஹிந்து என்பது வாழ்சியல் முறை என்று கூறியவர் ராம கோபாலான். ராம கோபாலன் இல்லை என்றால் தமிழகம் எங்கு சென்று இருக்கும் என்று எண்ணிக்கூட பார்க்க முடியவில்லை. ராம கோபாலன் இறந்த போது ஸ்டாலின் இறங்கல் தெரிவித்து இருந்தார். ராம கோபாலன் கூறிய கருத்துகள் இல்லை என்று கூற முடியாது! ஏற்றுக்கொள்ள கூடியது என்றே கூறி இருந்தார்.

வெள்ளி, சனி, ஞாயிறு கோவிலை திறங்கள் என்று அமைப்புகளை விட பொது மக்கள் தான் கூறுகின்றனர். தமிழகத்தில் புரிதல் இல்லாமல் தான் அரசியல் வாதிகள் பேசி வருகின்றனர். ஆர்.எஸ்.எஸ், நம் சித்தாந்தம் குறித்த இங்கு உள்ள அரசிவாதிகளுக்கு நாம் விளக்க முன் வரவேண்டும். ஜி.எஸ்.டி. என்ன என்றே தெரியாத எம்.பிக்கள் இங்கு உள்ளனர். அதை நாம் பார்த்து வருகிறோம். இளைஞர்கள் ராம கோபாலன் அவர்களின் சித்தாந்தை கையில் எடுத்து கொள்ள வேண்டும் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.