மாட்டுவண்டி மணல் குவாரி திறக்கக்கோரி கொள்ளிடம் ஆற்றில் அமர்ந்து காத்திருப்பு போராட்டம்

0 466
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் நெ.1 டோல்கேட் அருகே தாளக்குடி மாற்றும் மாதவ பெருமாள் கோவில் பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் அரசு மாட்டுவண்டி மணல் குவாரி இயங்கி வந்தது. இந்த குவாரிகளின் மூலம் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 2,408 மாட்டுவண்டி தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை நம்பியிருந்தனர்.

இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மணல் குவாரிகள் இயங்க அரசு தடை விதித்தது. தற்போது கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை கட்டுப்பாடுகள் அதிகபட்சமாக தளர்வுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் மாட்டுவண்டி மணல் குவாரிகளுக்கு அனுமதி அளிக்க அரசு காலதாமதம் படுத்தி வருவதால் உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும் என கூறி தமிழ்நாடு விவசாயிகளின் மணல் மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்கத்தினர் பல்வேறு கட்டங்களாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நம்பர் 1 டோல்கேட் அருகே கொள்ளிடம் ஆற்றில் மாட்டு வண்டிகளுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர். இதுகுறித்து தகவலறிந்த கொள்ளிடம் நம்பர் 1 டோல்கேட் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போராட்டக்காரர்களை வழியிலேயே தடுத்து நிறுத்தினர்.

இதனையடுத்து மணல் மாட்டுவண்டி தொழிலாளர்கள் 600க்கும் மேற்பட்டோர் அனைவரும் ஒன்று திரண்டு கொள்ளிடம் ஆற்றில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த லால்குடி வட்டாட்சியர் சித்ரா, லால்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சீத்தாராமன் மற்றும் போலீசார் போராட்டக்காரர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போதே நாங்கள் கடந்த 5 மாதங்களாக மணல் குவாரியை திறக்க நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசை வலியுறுத்தி பல்வேறு கோரிக்கைகளை விடுத்தும் நடவடிக்கை இல்லை. அதனால் தாளக்குடி மற்றும் மாதவ பெருமாள் கோவில் ஊராட்சிக்கு உட்பட்ட கொள்ளிடம் ஆற்றில் மாட்டுவண்டி மணல் குவாரிகளை திறக்க அனுமதி வழங்கும் வரை இந்த இடத்தை விட்டு ஒரு அடி கூட நகர மாட்டோம் என கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.