அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திருச்சி வருகை : ப.குமார் அழைப்பு
திருச்சி, ஜூலை 28 திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற உள்ள, மக்களை காப்போம். தமிழகத்தை மீட்போம்.. எழுச்சிமிகு சுற்றுப்பயண நிகழ்விற்கு செல்வதற்காக நாளை 29.07.2025 செவ்வாய் கிழமை, காலை 9.30 மணியளவில் திருச்சி விமான நிலையம் வருகை தர உள்ளார். அது சமயம் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகத்தைச் சார்ந்த அனைத்து நிலைகளில் உள்ள நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் வருகை தருமாறு கேட்டு கொண்டுள்ளார்.