சி.பி.ஐ.(எம்.எல்) கட்சியின் நிறுவனர் சாருமஜீம்தாரின் நினைவு நாள் அனுசரிப்பு
திருச்சி, ஜூலை 28 சி.பி.ஐ.(எம்.எல்) கட்சியின் நிறுவனர், முன்னாள் பொதுசெயலாளர்
தோழர் சாருமஜீம்தாரின் 53 வது நினைவு நாளை முன்னிட்டு அவரது திருஉருவ படத்திற்கு நகர செயலாளர் பி.பாலு தலைமையில் மலர்தூவி மரியாதை செலுத்தபட்டது.
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இன்று சி.பி.ஐ.(எம்.எல்) கட்சியின்
நிறுவனர் முன்னாள் பொதுசெயலாளர் தோழர் சாருமஜீம்தாரின் 53 வது நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு நகர செயலாளர் பி.பாலு தலைமையில் மலர்தூவி மரியாதை செலுத்தபட்டது.
நிகழ்வில் மாவட்டசெயலாளர் வழக்கறிஞர் ஞானதேசிகன், மாநிலகுழு உறுப்பினர் வழக்கறிஞர் ராஜ்குமார், ஒன்றியசெயலாளர் தங்கராஜ், மாவட்டகுழு உறுப்பினர்
கே. கருப்பையா, கே.மாசிலாமணி, நகரகுழு உறுப்பினர்கள் ஜோதிபாசு, ஷாஜகான், பாலகுமரன், நாகராஜ், ஒன்றியகுழு உறுப்பினர்கள் மணிகண்டன்,பெருமாள், கதிர்மணி, மற்றும் நகர, ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்று உறுதிமொழி எடுத்து மரியாதை செலுத்தினர்.