விதிமீறல் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் மனு

0 280
Stalin trichy visit

திருச்சி, ஜுலை 28  விதிமுறைகள் மீறி கட்டப்படும் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் -மாவட்ட ஆட்சியரகத்தில் மனு

திருச்சி கலெக்டரிடம் இன்று சாமானிய மக்கள் நல கட்சி திருச்சி மாவட்ட பொருளாளர் ஜோசப் மதியம் மூன்று மணிக்கு மனு அளித்தார்.அதில், நத்தம்பாடி பட்டி கீழக்குறிச்சி கிராமத்தில் உள்ள அந்தோணியார்புரம் தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக கட்டப்பட்டு வருகின்ற கட்டிடங்கள் அதன் எல்லையை மீறி கட்டிட விதிகளையும் மீறி பொது சாலையையும் சேர்த்து ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. ஏற்கனவே மிகவும் குறுகிய தேசிய நெடுச்சாலையாக இருப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடங்களை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் பயன்படும் வகையில் செய்து தரும்படி கேட்டுக் கொண்டார். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர்சரவணனிடம்   மனு அளித்தனர்

Leave A Reply

Your email address will not be published.